12 ஏக்கர் 🌴தென்னந்தோப்பிற்கு ஆட்டோமேட்டிக் கேட் வால்வு சிஸ்டம் 💦

திரு. தனபால் கோவையில் வசித்து வருகிறார். இவர் கோவைக்கும் பொள்ளாச்சிக்கும் இடையில் உள்ள கோவில்பாளையத்தில் 12 ஏக்கர் தென்னந்தோப்பு வைத்துள்ளார்.
irrigation automation
❓இவர் எதற்காக மொபிடெக்கின் தானியங்கி நீர் பாசன கருவிகளை அமைத்துள்ளார்?

✅இவர் வேலை ஆள் ஒருவரை பணியில் அமர்த்தி இருந்தார், இருந்தாலும் அவர் சரிவர பணிக்கு வருவதில்லை. வாரம் ஒரு முறை மட்டுமே சில 🌴மரங்களுக்கு நீர் பாசனம் செய்து வந்தார். இதனால் 🥥தேங்காய் உற்பத்தி குறைந்து விட்டது.
திரு. தனபால் அவர்கள் ஒரு வேலையாக பொள்ளாச்சி நியூ ஸ்கீம் ரோட்டில் உள்ள குமரன் & கோ கடைக்கு சென்ற போது திரு. பிரபு அவர்கள் “மொபிடெக்கின் தானியங்கி நீர் பாசனம்” அமைத்து விட்டால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும் என்றார். அதன் பேரில் 19.09.2020 அன்று பொருத்தி சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.
automatic irrigation system
❓மொபிடெக்கின் தானியங்கி நீர் பாசனம் எவ்வாறு செயல்படுகிறது?

✅இந்த படத்தில் உள்ளது போல்
1️⃣கைகளால் திருப்பும் அனைத்து வால்வுகளையும் அகற்றி விட்டு எலெக்ட்ரிக் வால்வுகள் அமைக்கப்பட்டது
2️⃣மோட்டார் ஸ்டார்ட்டர் அருகில் தானியங்கி கருவிகள் பொருத்தப்பட்டது
3️⃣திரு. தனபால் அவர்களின் செல் போனில் மொபிடெக்கின் “DCON” செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு ஒவ்வொரு வால்விலும் எவ்வளவு நேரம் நீர் பாசனம் நடைபெற வேண்டும் என்று ப்ரோக்ராம் செய்யப்பட்டது.
mobitech irrigation automation controller
❓நீர் பாசனம் குறித்த தகவல்கள் எப்படி அறிந்து கொள்வது?

✅திரு. தனபால் அவர்களின் செல் போனில் “DCON” செயலி மூலம் நேரலையில்:
1️⃣மின்சாரத்தின் அளவு(VOLTAGE⚡️), கரண்ட்(AMPS), மோட்டார் இயங்குகின்றதா இல்லையா என்ற தகவல்.
2️⃣சொட்டு நீர்💧 பாசனத்தில் எவ்வளவு பிரஷர்(PRESSURE) உள்ளது என்ற தகவல்.
3️⃣எந்தெந்த வால்வுகளில் பாசனம் 🔵நடைபெற்றுள்ளது, எந்தெந்த வால்வுகளில் பாசனம் நடைபெற 🔴வேண்டும் என்ற தகவல்.
4️⃣வால்வு மற்றும் மின்சாரத்தில் பழுது ஏற்பட்டு பாசனம் நடைபெறவில்லை என்றால் செல்போனிற்கு📲📩 உடனடி தகவல்.
5️⃣கடைசி மூன்று மாதங்களில் எந்தெந்த வால்வுகளில் எவ்வளவு நேரம் பாசனம் நடைபெற்றது என்ற தகவல்.
🔢இன்னும் பல பல தகவல்களை திரு. தனபால் அவர்கள் DCON செயலி மூலம் அறிந்து கொள்கிறார்.

📶2008ம் ஆண்டு முதல் “மிஸ்டு கால்” மூலம் தோட்டத்தில் உள்ள மின் மோட்டார்களை செல் போன் மூலம் இயக்கும் கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வந்தோம், விவசாயிகள் வால்வுகளையும் செல் போன் மூலம் இயக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு விவசாயத்தில் சிறந்து விளங்கும் இஸ்ரேல் போன்ற மேலை நாடுகளில் பயன்படுத்தப்படும் “தானியங்கி நீர் பாசன முறை” 2014ம் ஆண்டு முதல் மொபிடெக் தயாரிக்க ஆரம்பித்தது.

❓மொபிடெக் தானியங்கி நீர் பாசனத்தின் நன்மைகள் என்ன?

1️⃣வேலை ஆள் பற்றாக்குறை முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
2️⃣தினமும் 150 முதல் 200 லிட்டர் வரை ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் நீர் சென்றுவிடுகிறது.
3️⃣தோட்டத்தில் பாசனம் நடைபெறுவதை நேரலையில்(LIVE) அறிந்து கொள்ளும் வசதி.
4️⃣இரவு நேரத்திலும் பாசனம் நடைபெறும்.
5️⃣அனைத்திற்கும் மேலாக நீர் மற்றும் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
6️⃣மேலும் நீர் இல்லாமல் மோட்டார் இயங்கும்(DRY RUN) பொழுதும், ஓவர் லோடில்(OVER LOAD) இயங்கும் பொழுதும் மோட்டாரின் இயக்கத்தை நிறுத்தி காயில் போவதில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.

Leave a Reply

Need Help?