Mobitech – Irrigation automation | Smart farming | Smart Irrigation

👨🏻‍💼திரு. விமல் அவர்கள் கரூர் மாவட்டம் நொய்யல் அருகில் 25 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார்.

இவர் தொழில் நிமித்தமாக கரூரில் வசித்து வருகிறார், 🇮🇳இந்தியாவில் 🦠 கொரோனா பரவலின் ஆரம்பத்தில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியவுடன் இவர் 📆 15 நாட்கள் தோட்டத்தில் வந்து தங்கி விட்டார்.

அப்பொழுது அவர் அறிந்து கொண்டது:
1. 25 ஏக்கருக்கு போதிய தண்ணீர்💧 உள்ளது ஆனால் 🌴மரங்கள் வாடுகின்றது.
2. வேலை ஆட்கள் 🧖🏽‍♂️🙁சரியாக நீர் பாய்ச்சுவது இல்லை.
3. சரியான 🤯மின்சாரம் இருந்தும் இந்த பிரச்சினை.

எனவே அவர் இந்த பிரச்சினையை சரி செய்ய கையில் எடுத்த ஆயுதம் தான் “💦தானியங்கி நீர் பாசனம்”

திரு. விமல் அவர்கள் என்னென்ன மாற்றங்களை செய்துள்ளார்:
1. 🤏🏼கையால் திருப்பபடும் வால்வுகளை அகற்றி விட்டு ⛲️எலெக்ட்ரிக் வால்வுகளை பொருத்தி விட்டார்
2. அதேபோன்று கையால் இயக்கும் மோட்டார் ஸ்டார்டரை அகற்றிவிட்டு தானியங்கி கருவிகளை பொருத்தி விட்டார்.
3. 25 ஏக்கர் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளது, எந்த கிணற்றில் இருந்து வேண்டுமானாலும் திரு. விமல் அவர்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சி கொள்ளலாம்.

சிறப்புகளும், பயன்களும்:
1. திரு. விமல் அவர்கள் 🧖🏽‍♂️⬇️வேலை ஆட்களை குறைத்து விட்டார். தற்பொழுது ஒரு ஆண் மற்றும் பெண்(ஒரு குடும்பம்) மட்டும் வேலையில் உள்ளனர்.
2. இதன் மூலம் வேலை ஆட்கள் சம்பளம்⬇️💰 குறைகிறது.
3. அனைத்து மரங்களும் 24 மணி நேரத்திற்கு ஒரு முறை 150 லிட்டர் நீரை பெற்றுவிடுகிறது.
4. ஆண் வேலை ஆள், அனைத்து மரங்களுக்கும் பாத்தியில் நீர் விழுகிறதா என்பதை உறுதி செய்தால் போதும்.
5. இதன் மூலம் சீரான நீர் பாசனம், தண்ணீர் மற்றும் மின்சாரம் மிச்சம். உற்பத்தி அதிகரிப்பு எனவே வருமானம் அதிகரிப்பு.

இது போன்ற ஒரு நீர் மேலாண்மையை செய்ய ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள மொபிடெக் ஒயர்லெஸ் சொல்யூசன் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Need Help?