இந்த பதிவின் மூலம் தானியங்கி முறையில் நுண்ணீர் 💦பாசனம்(Drip and sprinkler) எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்:

1. 👳🏽‍♂️விவசாயி ஒருவர் 10 ஏக்கர் தென்னை 🌴பயிர் செய்து வருகிறார் என்று வைத்து கொள்வோம்.

2. அந்த தோட்டத்தில் இரண்டு 💧போர்வெல் மற்றும் ஒரு கிணறு💧 உள்ளது என்று வைத்து கொள்வோம்.

3. அந்த👳🏽‍♂️ விவசாயி போர்வெல்லில் உள்ள தண்ணீரை கிணற்றில் விட்டு, 💦கிணற்றில் இருந்து சொட்டு நீர் பாசனம்(10 ஏக்கருக்கு மொத்தம் 10, 2″ வால்வுகள்) மூலம் தென்னை மரங்களுக்கு பாய்ச்சுகின்றார்.

4. 💦இந்த முறையின் மூலம், மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் 300 முதல் 400 லிட்டர் வரை தண்ணீர் பாய்ச்சுகிறார்.

😒இதன் மூலம் அந்த விவசாயி அடையும் கஷ்ட நஷ்டங்களை கீழே காண்போம்:

1. ஒவ்வொரு மரத்திற்கும் தினசரி 150💦 லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டும், ஆனால் கிடைப்பதில்லை.

2. 🌒இரவு நேரத்தில் தான் மும்முனை ⚡️மின்சாரம் வருகிறது, அந்த நேரத்தில் மோட்டாரை இயக்கி நீர் பாய்ச்ச வேலை 👱🏾‍♂️ஆட்கள் இல்லை.

3. 💦தண்ணீர் குறைவாக உள்ளதால் அனைத்து மரங்களுக்கும்🌴 பகிர்ந்து கொடுக்க முடியவில்லை.

4. 🥳திருமணம் மற்றும் இதர விசேஷங்களுக்கு செல்லும் பட்சத்தில் முறையான பாசனம் செய்ய 😟முடியவில்லை.

5. இதன் மூலம் 35% 💰உற்பத்தி குறைவாக உள்ளது.

🤩தானியங்கி சொட்டு நீர் பாசன முறையினை அமைத்து எவ்வாறு பயன் அடையலாம் என்பதை பார்ப்போம்:

1. 🦾உங்கள் மோட்டார் அறையில் உள்ள மோட்டார் ஸ்டார்ட்டர் அருகில் இந்த தானியங்கி 🤖கருவியினை பொருத்த வேண்டும்.

2. 🔌நீங்கள் தற்போது பயன்படுத்தும் கேட் வால்விற்கு பதில் எலக்ட்ரிக் கேட் வால்வுகளை பொருத்த வேண்டும்.

3. ஒவ்வொரு எலக்ட்ரிக் கேட் வால்வையும் தானியங்கி 🎛கருவியுடன் இணைக்க வேண்டும்.

4. தானியங்கி கருவியில் ஏதேனும் சிம்(வோடாபோன் & ஏர்டெல்…) கார்டு ஒன்றை இணைக்க வேண்டும்.

5. உங்களுடைய செல் போனில் இருந்து ஒவ்வொரு வால்விற்கும்💦 150 லிட்டர் நீர் பாய்ச்ச வேண்டும் என்று ப்ரோக்ராம் செய்து விட வேண்டும்.

6. இந்த தானியங்கி கருவி, தினமும் அதன் வேலையினை எந்த எதிர்பார்ப்பும் இன்றி செவ்வனே செய்து முடித்து விடும்.

7. இதன் மூலம் நீர் 💦மேலாண்மையை அதிகரிப்பதுடன் 35% உற்பத்தியையும் அதிகரிக்க முடியும்.

Leave a Reply

Need Help?