👳🏽♂️வேலை ஆள் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு👍🏻
தானியங்கி நீர்ப்பாசன முறையை அமைப்பதற்கு முன்பு திரு.காந்தீபன் அவர்கள் சந்தித்த சவால்கள்:
1. தேவையான அளவு நீர் இருந்தும் ஆள் பற்றாக்குறையால் இவரால் நீர்ப்பாசனம் செய்ய முடியவில்லை
2. 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே இவர் நீர்ப்பாசனம் செய்து வந்தார்
3. இதனால் இவருக்கு தேங்காய் காப்பு மிகவும் குறைந்துவிட்டது
திருப்பூரில் உள்ள திரு. காந்தீபன் அவர்கள் பொள்ளாச்சியில் உள்ள தனது 23 ஏக்கர் தென்னை மரத்திற்கு தானியங்கி முறையில் நீர்ப்பாசனம் செய்யும் வசதியை அமைத்தார்.
தோட்டத்தில் அவர் செய்த மாற்றங்கள்:
1. ஏற்கனவே இருந்த கைகளால் திருப்பும் வால்வுகளை அகற்றிவிட்டு எலெக்ட்ரிக் வால்வுகளை அமைத்தார்
2. மோட்டார் ஸ்டார்டர் அறையில் Mobitech-ன் தானியங்கி DCON கருவிகளை பொருத்தினார்
3. தன்னுடைய செல் ஃபோனில் DCON செயலியை பதிவிறக்கம் செய்து, ஒவ்வொரு வால்விலும் எவ்வளவு நேரம் பாசனம் நடைபெற வேண்டும் என்பதை புரோகிராம் செய்தார்.
இப்பொழுது அவர் அடையும் பயன்கள்:
1. ஒவ்வொரு வால்விலும் எவ்வளவு நேரம் பாசனம் நடைபெற்றது என்பதை எளிதில் தெரிந்து கொள்கிறார்
2. தானியங்கி கருவியானது ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் தினமும் நீரைக்கொண்டு சேர்த்துவிடுகிறது
3. இதன் மூலம் இவருக்கு 35% தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும்